பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0816/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரசன்ன ரணவீர, பா.உ.

    1. 816/ '16

      கௌரவ பிரசன்ன ரணவீர,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 மே மாதம் கொலன்னாவை, களனி, கடுவெல, ஹங்வெல்ல மற்றும் பியகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக வாக்களித்த ரூபா 10,000/= கொடுப்பனவு தற்போது வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை யாது;

      (ii) இதற்காக தற்போது செலவிடப்பட்டுள்ள நிதித்தொகை யாது;

      (iii) உதவி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் யாவை;

      (iv) உதவி பெறுவதற்கான தகுதிபெற்ற ஆட்களின் எண்ணிக்கை யாது;

      (v) வாடகை, குத்தகை அல்லது தற்காலிக அடிப்படையில் வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுமா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக ஐக்கிய அமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிதி ரீதியான மற்றும் பொருள் ரீதியான உதவிகள் தற்போது இந்நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளனவா;

      (ii) ஆமெனில், கிடைக்கப்பெற்றுள்ள நிதி ரீதியான உதவியின் அளவு மற்றும் பொருள் ரீதியான உதவியின் பெறுமதி வெவ்வேறாக யாது;

      (iii) மேற்படி உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா;

      (iv) ஆமெனில், இவ்வுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ள ஆட்களின் எண்ணிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-09

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணவீர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks