E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0817/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. 817/ '16

      கௌரவ விமலவீர திசாநாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) கொழும்பு அல்லது அதனை அண்மித்த பிரதேசங்களில் பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படைவீரர்கள் வெளி மாகாணங்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றார்கள் என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) இவ்வாறு வரவழைக்கப்பட்டு பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தப்படும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படைவீரர்களில் ஒரு சிலருக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவுப்படிக் கொடுப்பனவு செலுத்தப்படுவதென்பதையும்;

      (ii) இச்சேவைக்கும் நிலைமைக்கும் நிகராக சேவையில் ஈடுபடுத்தப்படும் மேலும் சில படைவீரர்களுக்கு மேற்படி கொடுப்பனவு செலுத்தப்படுவதில்லை என்பதையும்;

      (iii) இதற்கமைய சமமான சேவைகள் மற்றும் சமமான நிலைமையின் கீழ் இப் படைவீரர்கள் சிலருக்கு பாரபட்சம் காட்டப்படுவது அநீதியானதென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (இ) ஆமெனின், இவ்வாறு அநீதிக்கு உள்ளாகின்ற படைவீரர்களுக்கு நியாயமான வாழ்க்கைச் செலவுப்படிக் கொடுப்பனவொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-08

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks