E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0877/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

    1. 877/ '16

      கௌரவ விதுர விக்கிரமநாயக்க,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் பேணிவரப்படும் 'தே சக்தி' தேயிலைத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாது;

      (ii) தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி முதல் இன்றுவரை ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை, உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை கிலோக்களின் அளவு மற்றும் அடைந்த இலாபம் அல்லது நட்டம் ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

      (iii) தற்போது மேற்படி தொழிற்சாலைகள் நிருவகிக்கப்படும் முறையியல் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) ரய்கம் கோரளையில், 'தே சக்தி' தேயிலைத் தொழிற்சாலையின் தற்போதைய நிருவாகத்துக்குப் பொறுப்பாக உள்ள நிறுவனம் யாது;

      (ii) இங்கு சேவையை இழந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் யாவை;

      (iii) மேற்படி தொழிற்சாலைக்குச் சொந்தமான இயந்திர சாதனங்களிலிருந்து உயர்ந்தபட்ச உற்பத்தி பெற்றுக்கொள்ளப்படாமைக்கான காரணம் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-10-07

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks