பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0948/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

    1. 948/ '16

      கெளரவ எஸ்.சீ. முத்துகுமாரண,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

      (அ) (i) மகாவலி அபிவிருத்திக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் தலாவ, தம்புத்தேகம, கல்னேவ மற்றும் இப்பலோகம ஆகிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்களில் மயானங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புகள் படிப்படியாக குறைவடைந்ததென்பதையும்;

      (ii) அதற்கான தீர்வாக அப்பிரதேசங்களுக்காக தகனக்கூடமொன்றை அமைத்துத்தருமாறு மக்கள் நீண்டகாலமாக தங்களின் அமைச்சிடம் கோரிக்கை விடுத்தனரென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேலே குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 2014 ஆம் ஆண்டுக்காக கலாவெவ தொகுதியின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளிலிருந்து எப்பாவல மயானத்தில் தகனக்கூடமொன்றை நிர்மாணித்தல் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது;

      (ii) தகனக்கூடத்தை நிர்மாணிக்க ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது;

      (iii) அதன் நிர்மாணிப்பு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது ஏன்;

      (iv) அதன் நிர்மாணிப்புகளை நிறைவுசெய்து மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கும் திகதி யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-23

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-21

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks