E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0263/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

    1. 0263/ ‘10

      கெளரவ ரஊப் ஹகீம்,—  நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      காலி கடவத்சதர பிரதேச செயலகப் பிரிவில், காலி மாநகர சபை எல்லையில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான மொஹிதீன் வத்த வீடமைப்புத் திட்டத்தில் உத்தியோகபூர்வமாக குடியிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

      (ii) அக்குடியிருப்பாளர்களின் பெயர்களும் முகவரிகளும் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்குச் சமர்ப்பிப்பாரா?

      (ஆ) (i) 20 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திலிருந்து, மொஹிதீன் வத்த வீடமைப்புத் திட்டத்தில் மேற்படி நிரந்தரக் குடியிருப்பாளார்களின் வீடுகளுக்கு உரித்துப் பத்திரங்கள் (உறுதிகள்) இதுவரை வழங்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்,

      (ii) மேற்படி நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு உரித்துப் பத்திரங்களை (உறுதிகள்) தாமதமின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், என்?

       

கேட்கப்பட்ட திகதி

2010-07-03

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks