பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1013/ '16
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் தொழிற்பாடுகளை மேற்கொள்கின்ற கம்பனிகள் யாவை என்பதையும்;
(ii) SAGT கம்பனிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iii) அந்த உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) CICT கம்பனிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட திகதி யாதென்பதையும்;
(v) அந்த உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(vi) கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் தொழிற்பாடுகளை மேற்படி தனியார் கம்பனிகளுக்கு கையளிப்பதில் தாக்கம் செலுத்திய காரணிகள் யாவையென்பதையும்;
(vii) 1998 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையில் இலங்கை துறைமுக அதிகாரசபை, SAGT கம்பனி மற்றும் CICT கம்பனி ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட கொள்கலன் தொழிற்பாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(viii) மொத்த கொள்கலன் தொழிற்பாடுகளில், ஒவ்வொரு கம்பனியும் மேற்கொண்ட தொழிற்பாடுகளின் எண்ணிக்கையின் சதவீதம் ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-01-24
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-01-24
பதில் அளித்தார்
கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks