பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1029/ '16
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பெருமளவிலான அரச ஊழியர்கள் வௌிநாடுகளில் புகலிடம் கோரினார்கள் என்பதையும்;
(ii) இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு 2006.02.16 ஆம் திகதிய 4/2006 ஆம் இலக்கமுடைய பொது நிர்வாக சுற்றிக்கை வௌியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் யுத்தம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததென்பதையும்;
(iii) 2013.10.31 ஆம் திகதிய 4/2006(1) ஆம் இலக்கமுடைய சுற்றறிக்கையின் மூலம் இந்த நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மேன்முறையீடு செய்வதற்காக இரண்டு மாதங்கள் போன்றதொரு குறுகிய காலம் மாத்திரம் வழங்கப்பட்டிருந்ததால், அநேகமானவர்கள் இது சம்பந்தமாக அறிந்திருக்கவில்லை என்பதையும்;
(iv) மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும் போது பாதுகாப்பு பிரிவின் அறிக்கைகள் கோரப்படுகின்றன என்பதையும்;
(v) இந்நிலைமையின் காரணமாக இன்னலுக்கு உள்ளாகிய அநேகமானவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலையினுள் அண்ணளவாக 5 மாத காலத்தை வழங்கி அது சம்பந்தமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கும்;
(ii) இன்னலுக்கு உள்ளாகியவர்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கும்;
(iii) பாதுகாப்புப் பிரிவின் இடையீட்டினை நிறுத்துவதற்கும்;
(iv) துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கும்;
நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-08
கேட்டவர்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks