E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1031/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

    1. 1031/ '16

      கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) யுத்த நிலைமையின் காரணமாக கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மரணித்த/அங்கவீனமுற்ற உத்தியோகத்தர்களுக்கு நட்டஈடு செலுத்தும் பொருட்டு 21/88 மற்றும் 59/89 ஆம் இலக்க சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டன என்பதையும்;

      (ii) அதன் பின்னர் 2005.05.04 ஆம் திகதிய 22/93(iii) ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் இறுதியாகப் பெற்றுக்கொண்ட சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு 120 மாதங்களுக்கான சம்பளத்தை நட்டஈடாகச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதென்பதையும்;

      (iii) எனினும், மேற்படி சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகள், 21/88 மற்றும் 59/89 ஆம் இலக்க சுற்றறிக்கைகளின் கீழ் (REPPIA) நிவாரணம் பெற்றவர்களுக்கு ஏற்புடையதாக அமையாதமையின் காரணமாக பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு கணிசமான அளவு சலுகைகள் கிடைக்கப்பெறவில்லை என்பதையும்;

      (iv) தற்போது நிவாரணங்களைக் கோருகின்றபோது பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு இசைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி விடயம் சம்பந்தமாக 21/88, 59/89, 22/93 மற்றும் 22/93 (iii) ஆம் இலக்க சுற்றறிக்கைகளுடன் தொடர்புபட்டதாக புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிடுவதற்கும்;

      (ii) உத்தியோகத்தருக்கு 55 வயது பூர்த்தியாகும் வரை மரணித்தவரின் குடும்பத்திற்கு சம்பளம் மற்றும் நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்கும்;

      (iii) பாதுகாப்புப் பிரிவுகளிலிருந்து பெறப்பட வேண்டிய பாதுகாப்பு இசைவு அறிக்கைகளிலிருந்து விடுவிப்பதற்கும்;

      நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-25

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-01-25

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks