E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1035/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 1035/ '16

      கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் "சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மீன்பிடிக் கைத்தொழிலுக்கென நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தல்" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூபா 1,600 மில்லியன் தொகை குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உங்கள் அமைச்சுக்குக் கிடைத்துள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி பணத் தொகை குறித்த கருத்திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) அத்தொகை ஈடுபடுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) கம்பஹா மாவட்டத்தில், மீன்பிடிக் கைத்தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நீர்கொழும்பு பிரதேசத்தின் மீனவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (ii) அதன் மூலம் மீனவர்களின் மாதாந்த சராசரி வருமானம் அதிகரித்துள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-10

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-12-10

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks