E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1068/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஏவலாளர்கள் ஒன்றிணைந்த சேவையை சேர்ந்தவர்களாவர் என்பதையும்;

      (ii) ஏவலாளர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு அதிகாரம் இல்லையென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) 2016 ஆம் ஆண்டில் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு ஏவலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வனுமதி கிடைத்த திகதி யாதென்பதையும்;

      (iii) மேற்படி அனுமதி வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியொன்றை சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) ஏவலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நேர்முகப் பரீட்சை மேலதிக புகையிரத பொதுமுகாமையாளரின் (நிருவாகம்) தலைமையில் நடாத்தப்பட்டதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தியோகத்தர் சேவை இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iii) சேவை இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியுள்ள உத்தியோகத்தரொருவர் சேவையில் ஈடுபடுவது எவ்வாறு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-06

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-06

பதில் அளித்தார்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks