E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1076/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1.  

      கௌரவ பிமல் ரத்நாயக்க,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான ஹப்புத்தளையிலுள்ள காணிகளில் 75 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம்தொட்டு இன்று வரை வசிக்கும் மக்களிடம் ஆண்டுதோறும் வரி அறவிடப்படுகிறது என்பதையும்;

      (ii) மேற்படி ஆண்டு வரி 1970 இல், ரூபா 75/- இற்கும் ரூபா 80/- இற்கும் இடைப்பட்டதாகக் காணப்பட்டதுடன், இன்றளவில் அத்தொகை ரூபா 10,000/- இற்கும் ரூபா 25,000/- இற்கும் இடைப்பட்ட தொகையாக அதிகரிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) ஒரே காணியின் ஒரு பகுதியில் வசிப்பவர்களுக்கு உறுதிகள் மூலம் உரித்தளிக்கப்பட்டுள்ள நிலையில், அதே காணியின் வேறொரு பகுதியில் வசிப்பவர்களுக்கு வரி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (iv) வரித் தொகை செலுத்தப்படாவிடின், காணிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) 1930 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை இக்காணிகளில் வசிக்கும் இவர்களிடமிருந்து தற்போது அறவிடப்படும் அதிக வரியினைக் குறைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) மேற்படி காணிகளை அவற்றில் வசிப்பவர்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-27

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-28

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks