பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1148/ '16
கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) காலி, கடவத் சத்தற பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள மொஹிதீன்வத்த வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாது;
(ii) அந்த வீடுகளில் தற்போது குடியிருப்பவர்களாக இனங்காணப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் முகவரிகளும் யாவை;
(iii) மேற்படி வீடுகளின் ஆரம்ப உரிமையாளர்களின் பெயர்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி வீடமைப்புத் திட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு யாது;
(ii) காணி சுவீகரிக்கப்பட்ட வேளையில் காணி உரிமையாளர்/ உரிமையாளர்கள் என்றவகையில் இனங்காணப்பட்டிருந்த ஆளின்/ ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;
(iii) மேற்படி காணியை அரசாங்கம் சுவீகரித்ததாக குறிப்பிட்டுள்ள வர்த்தமானப் பத்திரிகையின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா;
(iv) காணி சுவீகரித்தலுக்காக அப்போது இழப்பீடு வழங்கப்பட்டதா;
(v) ஆமெனில், அந்த இழப்பீட்டுத் தொகை யாது;
(vi) இழப்பீட்டினை பெற்ற ஆட்களின் பெயர்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-09
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-03-09
பதில் அளித்தார்
கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks