E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1154/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) மத்துகம கல்வி வலயத்துக்குரிய மே.மா/ம/வலகெதர மகா வித்தியாலயம் 2012 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை பாடசாலை கருத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட போதிலும் அப் பாடசாலைக்கு தொழில்நுட்பவியல் கூடமொன்று மாத்திரமே கிடைத்துள்ளதென்பதையும்;

      (ii) 2016 ஆம் ஆண்டில் அப் பாடசாலை "அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" கருத்திட்டத்தின் 'சீ' வகுதிக்குள் உள்ளடக்கப்பட்ட போதிலும், அதன் கீழ் புதிதாக எந்தவொரு வகுப்பறை கட்டடமும் வழங்கப்படவில்லை என்பதையும்;

      (iii) கடந்த 15 ஆண்டுகளாக இப் பாடசாலைக்கு போதியளவு பௌதீக வளங்கள் கிடைக்கவில்லை என்பதையும்;

      (iv) பாடசாலையில் சங்கீதம், விஞ்ஞானம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, ஆலோசனை ஆகிய பாடங்களையும் 6 - 9 ஆம் தரங்களுக்கு தமிழ் மொழியையும் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?

      (ஆ) (i) சுமார் 1200 மாணவர்கள் கல்வி கற்கின்ற இப் பாடசாலைக்கு போதியளவு கட்டட வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-26

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-01-30

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks