E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1155/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சுக்கு CAQ - 1043 மற்றும் CAQ - 1047 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனவா;

      (ii) ஆமெனில், இவ்வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்ட திகதிகள் யாவை;

      (iii) ஒவ்வொரு வாகனமும் கொள்வனவு செய்யப்பட்ட விலை யாது;

      (iv) இதற்கென கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டதா;

      (v) ஆமெனில், அத் திகதி யாது;

      (vi) கேள்விப் பத்திரங்களை முன்வைத்த நிறுவனங்கள் மற்றும் அவர்கள் முன்வைத்த விலை மனுக்கள் யாவை;

      (vii) இவ்வாகனங்களின் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆரம்ப உரிமையாளர்கள் யாவர் ;

      (viii) இவர்களின் முகவரிகள் யாவை;

      (ix) சுங்க அறிக்கைகளின் படி இவ்வாகனங்கள் இறக்குமதியின்போது CIF பெறுமதி மற்றும் செலுத்தப்பட்ட பணத் தொகை யாது;

      (x) இவ்வாகனங்களுக்கு கிடைத்த வரிச் சலுகை எவ்வளவு;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-07

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks