E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1346/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

    1. 1346/ '16

      கெளரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) "பர்ப்பச்சுவல் ரெசரீஸ்" நிறுவனத்தினால் இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி முறிகளை கொள்வனவு செய்யும் போது முறைகேடு ஏதும் இடம்பெற்றுள்ளதாக COPE அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) அந்தச் சம்பவம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டது என்பதையும்;

      (iii) அந்த விசாரணை தொடர்பான அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நாகஹமுல்ல என்ற உத்தியோகத்தரினால் 2015 யூன் மாதம் அல்லது அதற்கு அண்மித்த காலத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (iv) அந்த WPI கடிதக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (v) சில தினைங்களுக்குப் பின்னர் அந்தக் கடிதக் கோவையை சட்டமா அதிபர் மீண்டும் பெற்றுக் கொண்டு அந்த விசாரணையை நிறுத்தி, சிவில் பிரிவின் உயர் உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கி உள்ளார் என்பதையும்;

      அவர் அறிவிப்பாரா?

      (ஆ) (i) அந்தக் கடிதக் கோப்பு ஒப்படைக்கப்பட்ட உத்தியோகத்தரின் பெயர் யாது என்பதையும்;

      (ii) அந்த உத்தியோகத்தரிடமிருந்து கடிதக் கோப்பு வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணம் யாது என்பதையும்;

      (iii) அந்த கடிதக் கோப்பு தொடர்பான தற்போதைய நிலைமை யாது என்பதையும்;

      (iv) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி விசாரணை தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-05

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-04-05

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks