பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ டலஸ் அழகப்பெரும,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மாணவர்களுக்கு வெளிவாரிப் பட்டப் பாடநெறிகளைக் கற்பதற்கு இருந்த வாய்ப்புகளைக் குறைப்பதற்கான கொள்கைத் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) 2016 ஆம் ஆண்டில் வெளிவாரிப் பட்டப் பாடநெறிகளுக்கு அனுமதிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பட்டப் பாடநெறி மற்றும் ஆண், பெண் எனும் அடிப்டையில் வெவ்வேறாக யாது;
(iii) 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் உயர் தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iv) 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கையினுள் செயற்படுகின்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாது;
(v) மேலே (iv) இல் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் கற்கும் பட்டப் பாடநெறிகள் யாவை;
(vi) இந்த ஒவ்வொரு பாடநெறியையும் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(vii) மேலே (v) மற்றும் (vi) க்கு விடை அளிக்கப்படாவிடின், அது ஏன்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-07
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-07
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks