E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1518/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. கெளரவ (திருமதி) ரோஹிணீ குமாரி விஜேரத்ன,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க காணி மறுசீரமைப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தான மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள பயிர்செய்கைகளைக் கொண்ட காணிகளில், இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கும், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்துக்காக வழங்கப்பட்டுள்ள காணிகளில் எவ்வளவு காணிகள் கட்டுப்பாடின்றி தரிசு நிலமாகவும் வயற்காணிகளாகவும் காணப்படுகின்றன என்பதையும்;

      (ii) மேற்படி காணிகள் அளவை செய்யப்பட்டு இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) மேற்படி காணிகளை பயனுறுதியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு தற்போது ஒரு வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) மேற்படி காணிகளை, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு காணிகளை வெளிப்படுத்திய ஆட்களின் சட்டரீதியான கடப்பாடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மற்றும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-26

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-26

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks