பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பெயர்களை அவர்களின் தரங்களுடனும்;
(ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட பெயர்களில், நிரந்தர, பதில் மற்றும் காப்பீட்டு (cover up) அடிப்படையில் கடமைகளை மேற்கொள்ளும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பெயர்களையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கை கல்வி நிருவாக சேவையில் பதில் நியமனத்துக்கு தகுதியுள்ள வகுப்பு-II ஐச் சேர்ந்த அலுவலர்கள் இருக்கும் போது, காப்பீட்டுக் (cover up) கடமையில் கனிஷ்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
(ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட நியமனங்கள் 2015.08.21 ஆம் திகதிய 1928/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணானது என்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) (i) இந்த ஒழுங்கீனத்தை சீராக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) அவ்வாறெனில், எப்போது என்பதையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-20
கேட்டவர்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-20
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks