E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1581/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

    1. கௌரவ விதுர விக்கிரமநாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை இராணுவ ஆஸ்பத்திரியில் சிவில் பணிகளை மேற்கொள்கின்ற சிவில் ஊழியர்களாக நியமனம் பெற்றுள்ளவர்கள் தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளின் கீழ் வருகின்றனர் என அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) எனினும், சேவைத் தேவையின் கீழ் இவ்வூழியர்கள் நாளொன்றுக்கு நேர வரையறையின்றி கடமையாற்றுகின்றனரென்பதையும்;

      (iii) அவ்வாறு மேலதிக ​நேரம் கடமையாற்றிய போதிலும் இவர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவோ அல்லது வேறு கொடுப்பனவோ வழங்கப்படுவதில்லை என்பதையும்;

      (iv) எனினும், இராணுவ முகாம்களில் கடமையாற்றுகின்ற சிவில் ஊழியர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு நூறு மணித்தியாலங்களை தாண்டாத மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படுகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) இவ்வாறு ஒரு பிரிவினர் இழந்துள்ள மேலதிக நேரக் கொடுப்பனவை இவர்களுக்கும் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-08

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks