பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பிமல் ரத்நாயக்க,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உத்தேச குருணாகல் –ஹபரண புகையிரதப் பாதையின் ஆரம்ப திட்டத்தை மாற்றுவதற்கு இவ்வளவு காலம் எடுத்தது ஏனென்பதையும்:
(ii) மேற்படி மாற்றத்தினூடாக பழைய திட்டம் தோல்விகரமானதென்பது புலப்படுகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதை புரிந்துக்கொள்வதற்கு இவ்வளவு காலம் எடுத்தது ஏனென்பதையும்;
(iv) மேற்படி மாற்றத்தினால் விரயமாக்கப்பட்ட பொதுப்பணம் மற்றும் அதற்கு இரையான மக்கள் மீது விடுக்கப்பட்ட அழுத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாதென்பதையும்;
(v) மேற்படி இரண்டு திட்டங்களையும் விபரமான அறிக்கைகளுடன் தனித்தனியாக சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(vi) மேற்படி புகையிரத வீதி அமைக்கப்படுவதன் அடிப்படைத் தேவை யாதென்பதையும்;
(vii) இப் புகையிரத பாதை காரணமாக சொத்துக்களை இழக்கின்றவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா என்பதையும்;
(viii) ஆமெனில், நட்டஈட்டுத் தொகை மற்றும் நிபந்தனைகள் யாவை என்பதையும்;
(ix) ஆரம்ப திட்டத்தின் படி சொத்துகளை இழக்கின்ற மக்கள் குறிப்பிட்ட காணிகளில் எத்தகைய அபிவிருத்திப் பணியையும் செய்ய முடியாதுள்ளமை, காணிகளின் வர்த்தக மதிப்பீடு குறைவடைதல், கடன்பட்டு புதிய வீடுகளை நிர்மாணித்து குடியிருந்த வீடுகளின் பராமரிப்பு கைவிடப்பட்டமை போன்ற காரணங்களினால் சுமார் 10 ஆண்டு காலம் கடும் அழுத்தத்துடன் இருந்தனர் என்பதை ஏற்றுகொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-19
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-19
பதில் அளித்தார்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks