E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1591/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. கௌரவ பிமல் ரத்நாயக்க,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) உத்தேச குருணாகல் – ஹபரணை புகையிரதப் பாதையின் ஆரம்பத் திட்டம் தயாரிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு பின்னர் அதனை மாற்றியமைத்து புதிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டதன் விளைவாக சொத்துக்களை இழக்கும் மக்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) இத்திட்டம் மாற்றியமைப்பட்டமைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு கிளம்பியுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iii) நிர்மாணிப்புகளுக்காக மற்றும் நட்டஈட்டினை வழங்குவதற்காக உத்தேசிக்கப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iv) இந்த பணத்தொகையை வழங்கும் நிறுவனம் மற்றும் வழங்கும் அடிப்படை யாதென்பதையும்;

      (v) மேற்படி புகையிரதப் பாதை அமைக்கப்பட்ட பின்னர் குருணாகலில் இருந்து மஹவ ஊடாக ஹபரணை வரையுள்ள புகையிரதப் பாதையின் பயன் யாதென்பதையும்;

      (vi) உத்தேச புகையிரதப் பாதையின் மூலம் கிடைக்கும் நன்மைகள் யாவையென்பதையும்;

      (vii) ஹபரணைக்கு மாற்று புகையிரதப் பாதையொன்று இருக்கும் நிலையில் குருணாகல் ஊடாக அதிவேகப் பாதையொன்றும் அமைக்கப்படும் நிலையில் உத்தேச புகையிரதப் பாதைக்காக ஈடுபடுத்தப்படும் பெருந்தொகையான முதலீட்டுடன் ஒப்பிடுகையில், ஒப்பீட்டளவில் கிடைக்கும் நன்மைகள் பற்றி திருப்தியடைய முடியுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-20

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks