E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1603/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

    1.  

      கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொழும்பு நகருக்கு மின்சாரத்தை வழங்கும் நிலக்கீழ் மின்சார வழங்கல் முறையொன்று சுமார் 03 வருட காலமாக செயலிழந்துள்ளமை பற்றி அறிவாரா;

      (ii) மேற்படி மின்சார வழங்கல் முறையின் மின்சார வழங்கல் கொள்ளளவு யாது;

      (iii) குறிப்பிட்ட வழங்கல் முறையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தல் தாமதம் அடைவதற்கான காரணம் யாது;

      (iv) மேற்படி வழங்கல் முறையின் திருத்தியமைத்தல் தாமதமடைதல் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய உத்தியோகத்தர்கள் யார்;

      (v) மேற்படி ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் எதிராக அமைச்சு அல்லது இலங்கை மின்சார சபையினால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்காற்று நடவடிக்கை வெவ்வேறாக யாது;

      (vi) கொழும்பு நகரில் தொடர்ச்சியான மின்சார வழங்கலை உறுதிப்படுத்தும் முகமாக மின் அனுப்பல் முறைமையினை இற்றைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-27

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks