E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1607/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

    1. கெளரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றபோது திரவ நிலைமைக்கு மாற்றப்பட்ட இயற்கை வாயுவைப் (LNG) பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

      (ii) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை வாயுவை வர்த்தக ரீதியாக பயன்படுத்திக் கொள்வதற்கு இன்னமுமே ஆற்றல் இல்லை என்பதை அறிவாரா என்பதையும்;

      (iii) ஆமெனில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான திரவ நிலைக்கு மாற்றப்பட்ட இயற்கை வாயுவை இலங்கைக்கு இறக்குமதி செய்தல் மற்றும் களஞ்சியப்படுத்துதல் தொடர்பாக அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;

      (iv) இன்றேல், திரவ இயற்கை வாயுவை அறிமுகம் செய்வதாகத் தெரிவித்து அரசாங்கம் டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்ற மின்உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் செயற்பாட்டை மேற்கொள்கின்றதா என்பதையும்;

      (v) அவ்வாறான அபாயகரமான நிலைமை காணப்படுமாயின், அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க சக்தியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது ஏன் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-22

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-22

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks