E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1621/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. கௌரவ ஹேஷான் விதானகே,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக்கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையின் வருடாந்த சீனி நுகர்வுத் தேவைப்பாடு எவ்வளவு;

      (ii) 2011 - 2014 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவு;

      (iii) இலங்கையில் பிரதானமாக சீனி உற்பத்திக்கென இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை;

      (iv) 2011 - 2013 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்யப்பட்ட சீனியின் அளவு ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவு;

      (v) மேலே (i) இல் குறிப்படப்பட்ட சீனியின் அளவை இந்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாதா;

      (vi) நுகர்வுத் தேவைக்கான சீனியின் அளவை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks