பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1650/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 1650/ '17

      கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கடந்த தினத்தில் நடத்தப்பட்ட பாடசாலை அதிபர் சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சோ்ப்பதற்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் வெளிநாட்டுப் பயிற்சிக்காக தொிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) வெளிநாட்டு பயிற்சிக்காக தொிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

      (iii) வெளிநாட்டுப் பயிற்சிக்காக தொிவுசெய்யப்படும் போது பின்பற்றிய முறையியல் யாதென்பதையும்;

      (iv) பெரும் செலவினை செய்து பரீட்சை நடத்தப்பட்டு பயிற்சியும் வழங்கப்பட்ட இவர்கள் இதுவரை மாகாண சபைகளினால் உரிய இடங்களுக்கு நியமிக்கப்படவில்லை என்பதையும்;

      (v) இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-29

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-03-08

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks