பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கெளரவ விதுற விக்கிரமநாயக்க,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிரேஷ்ட பிரசைகள் கொடுப்பனவாக ஒரு சில குறைந்த வருமானம் பெறுவோர் மாதாந்தம் ரூபா 1900/- ஐப் பெற்றுக் கொண்டார்கள் என்பதையும்;
(ii) வேறு வருமான வழிகள் இல்லாத மற்றும் பிள்ளைகளின் உதவி ஒத்தாசைகள் இல்லாத குறைந்த வருமானம் பெறுவோரின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இப்பணத்தொகை பெரும் உதவியாக இருந்தது என்பதையும்;
(iii) தமது வயோதிபநிலைக்கு அரசாங்கம் வழங்கும் ஒரு நன்றிக் கொடுப்பனவாக அவர்கள் இதனை மதித்தார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்கின்ற இக் காலப்பகுதியில் ஒரு சில சிரேஷ்ட பிரசைகளுக்கு மேற்படி கொடுப்பனவை வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) ஒரு பிள்ளையேனும் அரசாங்க சேவையில் ஈடுபட்டிருப்பின், அவர் திருமணம் முடித்து வேறு ஓர் இடத்தில் வசித்து வந்தாலும், இந்தக் கொடுப்பனவு அவர்களின் தந்தை அல்லது தாய்க்கு உரித்தானதாக இருந்த போதிலும், அண்மையில் அவ்வாறான ஆட்களுக்கும் இக்கொடுப்பனவைச் செலுத்துதல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) தனியே வாழும் சிரேஷ்ட பிரசைகளுக்கு இந்தக் கொடுப்பனவை வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளமையானது மிகவும் அநீதியானதாகும் என்பதையும்;
அவர் ஏற்றுக் கொள்வாரா?
(இ) மேற்படி கொடுப்பனவைச் செலுத்துதல் நிறுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரசைகளுக்கு மேற்படி கொடுப்பனவை மீண்டும் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-20
கேட்டவர்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks