E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1708/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை விமானப் படையின் Fly Past வைபவம் காரணமாக இரத்மலானை விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (ii) மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிழக்குப் பகுதியில் விமானப் பயணங்களுக்கும் தடை ஏற்படுகின்றது என்பதை அறிவாரா என்பதையும்;

      (iii) மேற்படி வைபவம் காரணமாக, வெளிநாடு செல்கின்ற மற்றும் இலங்கைக்கு வருகின்ற விமானப் பயணிகளும் பெரும்பாலும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இந்த வைபவத்திற்கு அரசாங்கம் செலவிட்டுள்ள பணத்தொகை யாது என்பதையும்;

      (ii) மேற்படி பணத்தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முறை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks