E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1712/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகள் எத்தனை பேர் என்பதையும்;

      (ii) அவர்களில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது மரணமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதையும்;

      (iii) டெங்குத் தொற்று காரணமாக கிண்ணியா வைத்தியசாலையில் வைத்தியர்கள், பணியாட்டொகுதியினர், கட்டில்கள் மற்றும் இடவசதிகளுக்கான பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பதையும்;

      (iv) இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளையும்;

      (v) கிண்ணியா வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடானது நோயாளிகளை திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றுவதை கட்டாயப்படுத்தியுள்ளது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-23

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-23

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks