E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0426/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கௌரவ அசல ஜாகொடகே, பா.உ.,, பா.உ.

    1. 0426/ ‘10

      கெளரவ அசல ஜாகொடகே,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான, காலி மாவட்டத்தின் அக்மீமனையில் அமைந்துள்ள, வலகந்தூவ தோட்டத்தின் 19 ஹெக்டயர்கள் ரூபா. 21 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) இதற்குப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினது அங்கீகாரமும் அரச மதிப்பீடும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்,

      (ii) சட்ட ரீதியான விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையாயின் அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் என்பதையும்,

      (iii) அவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்,

      (iv) இதில் சட்ட ரீதியான முறையில் செயற்படாதிருந்திருப்பின், உடன்படிக்கையை இரத்துச் செய்து, அரசாங்கம் அத்தோட்டத்தை மீளப் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுக்குமா என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2010-09-24

கேட்டவர்

கௌரவ கௌரவ அசல ஜாகொடகே, பா.உ.,, பா.உ.

அமைச்சு

அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks