E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1753/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

    1. 1753/ '17

      கௌரவ லக்கி ஜயவர்தன,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போது நாடு பூராகவும் செயற்பட்டு வரும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கை யாது;

      (ii) இவற்றில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

      (iii) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை;

      (iv) மேலே (iii)இல் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தற்போது பேணிவருகின்ற ஆட்கள் யாவர்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை;

      (ii) அவற்றின் உரிமையாளர்கள் யாவர்;

      (iii) எரிபொருள் நிரப்பும் நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா;

      (iv) ஆமெனில், இந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கு முறைசார்ந்த முறையியலொன்றை தயார் செய்வாரா;

      (v) ஆமெனில், அது எவ்வாறு;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-17

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-10-17

பதில் அளித்தார்

கௌரவ அனோமா கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks