E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1754/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

    1. 1754/ '17

      கௌரவ லக்கி ஜயவர்தன,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) உடுநுவர பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கடலாதெணிய, லங்காதிலக்க மற்றும் அம்பெக்க எனும் வழிபாட்டுத்தலங்கள் உலக பிரசித்தி பெற்றுள்ள, மிக முக்கியமான புராதன இடங்களென்பதை ஏற்றுக்கொள்வாரா;

      (ii) மேற்படி இடங்களை பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனரென்பதை அறிவாரா;

      (iii) மேற்படி இடங்களில் பொது வசதிகள் இல்லாமையின் காரணமாக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி இடங்களில் குறைபாடாக உள்ள பொது வசதிகளை பெற்றுக்கொடுக்க தங்களது அமைச்சின் கீழ் துரிதமாக வேலைத் திட்டமொன்றை தயாரிப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-04

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-03-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks