E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1775/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. கௌரவ ஜயந்த சமரவீர,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017.03.31ஆம் திகதியன்று உள்ளவாறு இலங்கையிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;

      (iii) 2017.03.31ஆம் திகதியன்று உள்ளவாறு கடமையில் ஈடுபட்டுள்ள கிராம அலுவலர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2017.03.31ஆம் திகதியன்று உள்ளவாறு வெற்றிடமாக உள்ள கிராம அலுவலர் பதவிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்:

      (ii) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணம், மாவட்டம், பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிராம அலுவலர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;

      (iii) குறித்த வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக கிராம அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போட்டிப் பரீட்சையொன்று நடாத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனின், பரீட்சை நடாத்தப்பட்ட ஆண்டு மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (v) பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vi) ஆமெனின், குறித்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (vii) கிராம அலுவலர் பதவிக்காக தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (viii) இவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-23

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-23

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks