E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1872/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. 1872/ '17

      கௌரவ பிமல் ரத்நாயக்க,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கட்டுபெத்த, பண்டாரநாயக்க மாவத்தையில் வலது புறமாகவுள்ள நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் நடைபாதையொன்று நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அப்பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதென்பதையும்;

      (ii) நடைபாதையின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு பெருமளவு வேலைகள் பூர்த்தியடைந்திருக்கும் போது அதன் ஒப்பந்தக்காரர் வேலைகளை நிறுத்திவிட்டு 2016.09.12 ஆம் திகதி இயந்திர உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளதனால் அதன் பணிகள் மீண்டும் ஸ்தம்பிதமடைந்துள்ளது என்பதையும்;

      (iii) தற்போது அந்த நீர்த்தேக்கமும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசமும் குப்பைகள் அகற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுவதனால் சுற்றாடல் மாசடைந்து நுளம்புகளின் எண்ணிக்கையும் பொிதும் அதிகரித்துள்ளதென்பதையும்;

      (iv) நடைபாதையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதனால், துப்பரவு செய்யப்பட்ட நீர்த்தேக்கமும் கால்வாயும் முழுமையாக காடடர்ந்துள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இந்த நடைபாதையை நிர்மாணிப்பதற்கும் மற்றும் மிகவும் மாசடைந்துள்ள நீர்த்தேக்கத்தைத் துப்பரவு செய்யவும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், இதன் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      (iii) இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக ஏற்பட்ட செலவினை பொறுப்புக் கூறவேண்டியவர்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-09

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks