E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1989/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலக்கம் 11, புகையிரத வீதி, மன்னார் எனும் முகவரியில் அமைந்துள்ள (உறுதி இலக்கம் 16) 190 பேச்சஸ் அளவினைக் கொண்ட காணித் துண்டானது 1872.12.17 ஆம் திகதி மன்னார் காணிக் காரியாலத்தினால் மெதடிஸ்ட் திருச்சபைக்குரிய காணியாக பதிவு செய்யப்பட்டுள்ளதென்பதையும் (பதிவிலக்கம் B 1/53);

      (ii) 1985 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக குறிப்பிட்ட காணியைப் பராமரிக்க முடியாமல்போன சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவம் குறிப்பிட்ட காணியில் அலுவலகமொன்றை தாபித்துள்ளதென்பதையும்;

      (iii) மேற்படி அலுவலகத்திற்காக மன்னார் நகருக்கு அருகாமையில் காணித் துண்டொன்று ஒதுக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேலாகியும் மெதடிஸ்ட் திருச்சபைக்குச் சொந்தமான குறித்த காணியானது இதுவரையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லையென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) தற்போது மெதடிஸ்ட் திருச்சபைக்கு பெரிதும் தேவைப்பட்டுள்ள மேற்படி காணியைத் துரிதமாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-11

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks