பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2071/ '17
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி கமநல சேவை நிலையத்தில் திணைக்களத்துக்குச் சொந்தமான 23 உழவு இயந்திரங்களும் 8 இரண்டு சக்கர உழவு இயந்திரங்களும் எதுவித பராமரிப்போ அல்லது பயன்பெறுதலோ இன்றி கைவிடப்பட்டுள்ளன என்பதையும்;
(ii) மேற்படி உழவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் 4 வருட காலமாக திறந்த வெளியில் இருக்கின்றன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட உழவு இயந்திரங்களைப் பழுதுபார்த்து பாவனைக்கு எடுத்தல் தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், அவை பழுதுபார்க்கப்படும் காலம் மற்றும் பழுதுபார்த்ததன் பின்னர் உபயோகத்துக்கு எடுக்கப்படும் முறை யாது;
(iii) இன்றேல், மேற்படி உழவு இயந்திரங்களைப் பழுதுபார்த்து நியாயமான விலைக்கு கமநல அமைப்புக்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான சாத்தியம் காணப்படுகின்றதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-03-21
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks