E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2116/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

    1. 2116/ '17

      கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 27 கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய 114 கிராமங்களில் சுமார் 45 சிறு விவசாயக் குளங்கள் உள்ளனவென்பதையும்;

      (ii) மேற்படி குளங்கள் பல வருடங்களாக புனரமைக்கப்படாத காரணத்தினால் சிறு போகத்தின் போது நெற் செய்கையாளர்களுக்கும் ஏனைய விவசாயிகளுக்கும் ஏற்புடைய காலப்பகுதியில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது போகின்றமையால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட குளங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை புனரமைப்பதற்கு அமைச்சிடம் ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், இக்குளங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-04

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks