E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2124/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

    1. 2124/ '17

      கெளரவ மயந்த திசாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஈர வலயத்தில் வயல்கள் பாழடைந்துள்ளமை இலங்கையின் உணவு உற்பத்தி குறைவடைவதற்கும் மற்றும் சுற்றாடல் பிரச்சினைக்கும் காரணமாகியுள்ளது என்பதை அறிவாரா;

      (ii) பாழடைந்துள்ள வயல்களில் பயிர் செய்வது தொடர்பாக அமுல்படுத்தப்பட்டுள்ள பிரேரணைகள் யாவை;

      (iii) நெற் செய்கையிலிருந்து விவசாயிகள் நீங்குவதற்குக் காரணமாகியுள்ள விடயங்கள் யாவை;

      (iv) அதற்காக வழங்கப்படுகின்ற தீர்வுகள் யாவை;

      (v) வயல்களில் பயிர்செய்யும் பணியை மேற்கொள்வதற்காக அமைச்சின் கீழ் பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை யாது;

      (vi) மேற்படி அலுவலர்கள் யாவர்;

      (vii) அண்மையில் ஒரு கிராமத்திற்கு 20 போ் வீதம் மகளிர் கமத்தொழில் அமைப்பைத் தாபித்ததன் மூலம் பாழடைந்துள்ள வயல்களில் பயிர்செய்யும் பணி நிறைவேற்றப்படுகின்றதா;

      (viii) புதிய கமத்தொழில் கொள்கையில் பாழடைந்த வயல்களில் பயிர்செய்யும் வேலைத்திட்டம் உள்ளதா;

      (ix) பிரதேச மட்டத்தில் கமத்தொழில் கொள்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக ஒரு கமநல அபிவிருத்தி நிலையத்திற்கு பட்டதாரிகள் நான்கு பேர் வீதம் ஆட்சேர்ப்புச் செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள் நிறைவேறியுள்ளதா;

      (x) பட்டதாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-30

கேட்டவர்

கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks