பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2195 /'17
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்த தேயிலைத் தோட்டங்கள் நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனிகளுக்கு குறைந்த பணத் தொகைக்கு வழங்கப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி தோட்டங்கள் குத்தகைக்கு விடப்படுகின்றபோது அரசாங்கத்தினால் அறவிடப்படும் பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி கம்பனிகள் குத்தகைத் தொகையைச் செலுத்தாது, நிபந்தனைகளை மீறி, தோட்டங்களை பராமரிக்காது அழிவடையச் செய்து வருகின்றதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
(v) அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மீறப்பட்டு வருகின்றமையால், இத் தோட்டங்களை செழிப்படையச் செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கச் செய்ய அமைச்சு நடவடிக்கை எடுக்குமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-12-05
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks