பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2218/ '17
கௌரவ எஸ். சிறீதரன்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி நகர் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பரவிப் பாஞ்சான் பிரதேசம் தொடர்பாகவும்;
(ii) மேற்படி பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இற்றைவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும்;
(iii) இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட மேற்படி பிரதேசத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர் மக்கள் படிப்படியாக மீளக் குடியமர்த்தப்பட்டனர் என்பதையும்;
(iv) மேற்படி பிரதேசத்தில் வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக இராணுவத்திடமிருந்து விடுவித்து குறிப்பிட்ட மக்களுக்கு வழங்குவதாக சனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(v) 17.2 ஏக்கர் அளவிலான காணிப்பகுதி இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பதையும்;
(vi) அதன் காரணமாக, அக்காணிகளுக்கான உரிமையைக் கொண்டுள்ள 56 குடும்பங்கள் தற்போது குடியிருப்பதற்கு இடமின்றி நிர்கதி நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) சனாதிபதியின் அறிவித்தலின் பிரகாரம் மேற்படி காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) 17.2 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் திகதி யாதென்பதையும்;
(iii) மேற்படி (அ) (vi) இல் குறிப்பிடப்பட்டுள்ள 56 குடும்பங்களையும் மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படு்ம் திகதி யாதென்பதையும்;
(iv) அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-12-08
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks