E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2344/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 2344/ '17

      கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சர்வதேச நல்லுறவு விடயப்பரப்பு பற்றிய முதலாவது பட்டம் மற்றும் பட்டப்பின் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள மாணவர்கள் இவ்விடயப்பரப்பு பற்றி மூன்று நான்கு ஆண்டுகள் விரிவாக கற்றுள்ளனரென்பதால், இவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான ஏதேனும் முறையியல் தற்போது காணப்படுகின்றதா என்பதையும்;

      (ii) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி ஏற்ற பின்னர் மேற்படி பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள் தங்களுடைய அமைச்சுக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ளார்களாயின், இவர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொடுப்பாரா என்பதையும்;

      (iii) இன்றேல், எதிர்வரும் காலத்தில் மேற்படி பட்டதாரிகளை தங்கள் அமைச்சுக்கு ஆட்சேர்ப்பதற்கு பொருத்தமான முறையியலொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks