E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0223/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

    1. கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) 2010 ஆம் ஆண்டில் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவின், மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புதுவிளாங்குளம், புட்குளம், குஞ்சுகுளம், மன்னகுளம், கொல்லர் புளியங்குளம் ஆகிய 05 கிராமங்களில் சுமார் 270 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டார்கள் என்பதையும்;

      (ii) இக் கிராமங்கள் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளன என்பதையும்;

      (iii) மீள்குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து இதுவரைக்கும் இம் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்;

      (iv) A-9 வீதிக்கு பிரவேசிப்பதற்கான பாதைகள் இல்லாமை மற்றும் கிராமங்களுக்கு ஊடாக அமைந்துள்ள புகையிரதப் பாதைக்கு குறுக்காகச் செல்கின்ற வீதிகளுக்கு பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் இல்லாத காரணத்தினால் இம் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-07

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks