பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
487/ '18
கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவந்த மாவட்ட தபால் அத்தியட்சகர் அலுவலகம் யுத்த சமயத்தில் மூடப்பட்டதென்பதையும்;
(ii) மீளக் குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏனைய அனைத்து அலுவலகங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இவ்வலுவலகம் மாத்திரம் இற்றைவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும்;
(iii) எனவே, ஏறக்குறைய 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட தபால் அலுவலகத்திற்குச் சென்று தமது தபால் சம்பந்தமான பிரச்சினைகளை முன்வைக்கின்ற மிகவும் சிரமமான நிலைமையை முல்லைத்தீவு மக்கள் எதிர்நோக்கி உள்ளனரென்பதையும்;
(iv) இந்த அலுவலகத்தை மீண்டும் ஆரம்பித்தல் சம்பந்தமாக என்னால் 2017.07.07 ஆம் திகதி எழுத்திலான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், முல்லைத்தீவு மாவட்ட தபால் அத்தியட்சகர் அலுவலகத்தை மிகவும் துரிதமாக மீண்டும் திறந்துவைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-21
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks