பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2016-10-06
மீள் குடியேற்றம் புனர் நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா கடந்த செவ்வாய்க்கிழமை 4ம் திகதி ஒக்ரோபர் மாதம் 2016 அன்று பதின்மூன்றாவது முறையாக மிகச்சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
வீரத்திற்கு அதிபதியான துர்க்கை, செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளின் அருட்கடாட்சத்தினை பெற்றுக்கொள்வதற்காகக்கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சிறப்புக்களைக்கொண்ட நவராத்திரி விழாவை முன்னிட்டு 4ம் திகதி ஒக்டோபர் மாதம் 2016 அன்று காலை வேளை தொடக்கம் பாராளுமன்ற வளாகம் நந்திக் கொடி, மாவிலை, தோரணங்கள், வாழை மரங்கள் என்பவற்றால் மிகவும் மங்களகரமான முறையில் அலங்கரிக்கப்பட்டு விசேடமாக அமைக்கப்பட்ட தேர்வடிவிலான மலர் மேடையில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளும் எழுந்தருளிக்காட்சிதந்தனர்.
நாதஸ்வரம் மற்றும் தவில் வாத்தியக்கலைஞர்களின் மங்களவாத்தியம் முழங்க சிறப்பு பூஜைகள் காலை 9 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் கெளரவ கரு ஜயசூரிய எதிர்க் கட்சித்தலைவர் கௌரவ இரா. சம்பந்தன் குழுக்களின் பிரதித்தலைவர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் மேலும பல பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகைதந்தனர்.
கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல வாணேஸ்வரர் தேவஸ்தானக் குருக்கள் சிவ சிஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் மற்றும் அவரது குழுவினரும் மிகச்சிறப்பன முறையில் மந்திர உச்சாடனங்கள் செய்து பக்தி மயமான பூஜையினை மிகவும் நேர்த்தியாக செய்திருந்தனர்.
இப் பூஜை வழிபாடுகளில் அதிகளவான பாராளுமன்றப்பணியாளர்களும் மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் பணியாளர்களும் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டனர்.
பூஜை வழிபாடுகள் நிறைவு பெற்றதும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வு அனைவரதும் அமோக வரவேற்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks