07

E   |   සි   |  

2014-10-02

நவராத்திரி விழா 2014

பௌத்த சாசன மத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா கடந்த வியாழக்கிழமை 25ம் திகதி செப்டம்பர் மாதம் 2014 அன்று பதினோராவது முறையாக பக்திபூர்வமாக மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வீரத்திற்கு அதிபதியான துர்க்கை, செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளின் அருட்கடாட்சத்தையும் ஆசியினையும் பெற்றுக் கொள்வதற்காக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சிறப்புக்கள்கொண்ட நவராத்திரிவிழாவை முன்னிட்டு 25செப்டம்பர் 2014 காலைவேளை தொடக்கம் பாராளுமன்ற வளாகம், ‘நந்தி’ கொடிகள், தென்னோலை மற்றும் மாவிலைத் தோரணங்களுடன் வாழைமரங்கள் கொண்டும் மிகவும் மங்கலகரமான முறையில் பாரம்பரிய முறையப்படி அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூன்று தேவிகளும் சிறப்பாக மாலைகளினால் அலங்கரிக்கப்பட்ட தேர்வடிவிலான மலர் மேடையில் எழுந்தருளிக் காட்சியளித்தனர்.

கலாசார நிகழ்வுக்கென விசாலமான விசேட மேடை அமைக்கப்பட்டு வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நாதஸ்வரம் மற்றும் தவில் வாத்தியக் கலைஞர்கள் மங்களவாத்தியம் முழங்க சிறப்புப் பூஜைகள் காலை 10.00 மணிக்குத் தொடங்கியது. பிரதி சபாநாயகர் கௌரவ சந்திம வீரக்கொடி குழுக்களின் பிரதித் தவிசாளர் முருகேசு சந்திரகுமார் கௌரவ அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்தனர்.

தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணுமூர்த்தி ஆலய குருக்கள் சிவஸ்ரீ கே.கே. வைதீஸ்வரக் குருக்கள் மற்றும் அவரது குழுவினர் மிகவும் சிறப்பானமுறையில் மந்திர உச்சாடனங்கள் செய்து பக்திமயமான பூஜையினை மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார்கள்.

இப்பூஜை வழிபாடுகளில் அதிகளவிலான பாராளுமன்றப் பணியாளர்கள் பௌத்த சாசன மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணியாளர்கள் பொருமளவில் பக்தி பூர்வமாக கலந்துகொண்டார்கள். பூஜை நிகழ்வுகள் நிறைவுபெற்றதும் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இங்கு யாழ்பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பிரிவு மாணவர்களின் பாரம்பரிய மற்றும் கலாசார நடனநிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தெடர்ந்து கிளிநொச்சி மகா வித்தியாயலயம் மற்றும் கண்டி சத்திய சாய் கலாலய மாணவர்களின் நடனநிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகள் அனைத்தும் பார்வையாளர்களின் அமோக வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றதுடன், பங்கேற்ற கலைஞர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks