07

E   |   සි   |  

2024 ஆகஸ்ட் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
B : சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : சுகாதாரம் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்வி பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ix)    2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(x)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக் காட்சிச்சாலைத் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை

(xi) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 யூன் 18 ஆம் திகதிய 2389/08 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xii)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கருத்திற் கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கருத்திற் கொண்டும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 மே 09 ஆம் திகதிய 2383/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiii)    2023 - 2030 ஆம் ஆண்டுகளுக்கான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம்
(xiv)    2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 48 ஆம் பிரிவின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 15 ஆம் திகதிய 2393/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே                    
(ii)    கௌரவ ஜே.சீ. அலவத்துவல  
(iii)    கௌரவ ஹர்ஷண ராஜகருணா
(iv)    கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன     -      மூன்று மனுக்கள்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

பாடசாலைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் நிலவும் சிக்கல்கள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ கல்வி அமைச்சர் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களுக்கு “சர்வதேச பாரம்பரிய சிகெலவெத (Sihelogy) சபையைக் (ITSC) (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மாகாணசபை தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
இரண்டாம் மதிப்பீடு சபையினால் நிறைவேற்றப்பட்டதுடன் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நில்வலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் செயலிழப்பு” தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ புத்திக பத்திறண அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1615 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஆகஸ்ட் 07ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks