பார்க்க

E   |   සි   |  

2024 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ விபத்து மற்றும் கடற்றொழில் துறை ஆகியவற்றில் காணப்படும் சிக்கல்கள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


அனுதாபப் பிரேரணைகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற கௌரவ றொனீ த மெல் அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1405 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஆகஸ்ட் 21ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks