07

E   |   සි   |  

2024 ஆகஸ்ட் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ மனுஷ நாணயகார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக கௌரவ பந்துல லால் பண்டாரிகொட அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : ஹரின் பிரனாந்து மற்றும் கெளரவ மனுஷ நாணாயக்கார ஆகியோரது பாராளுமன்ற ஆசனங்கள் வெற்றிடமாகின்றமை தொடர்பானது
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்  
C : “மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
D : “பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLI ஆம் பகுதியையும் ;
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVII ஆம் பகுதியையும் ; மற்றும்
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் IV ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் I ஆம் பகுதியையும் மற்றும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதி

B.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும், நான்காம் தொகுதியின் I ஆம் பகுதியையும் மற்றும் ஐந்தாம் தொகுதியின் I ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான செலவினத் தலைப்பு 04 - உயர் நீதிமன்ற நீதியரசர்களின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vi)        2022 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கீட்டுக் கூற்றுக்களும்
(vii)        2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியின் ஆண்டறிக்கை.
(viii)        2023 ஆம் ஆண்டுக்கான தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ix)    2023 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(xii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiii)    2023 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiv)    2021/2022 ஆம் ஆண்டுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(xv)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xvi)    2022 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை மற்றும் முதுகலை பயிற்சி மையத்தின் ஆண்டறிக்கை
(xvii)    2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xviii)        2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(xix)    2023 ஆம் ஆண்டுக்கான அரச  பெருந்தோட்ட நிறுவன மறுசீர்திருத்த அமைச்சரவை அல்லாத அமைச்சின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை

(xx) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 44 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு நகரப் பொருளாதார ஆணைக்குழு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஒருமைப்பாட்டுடன் கொழும்பு துறைமுக நகரத்தின் அதிகாரப் பகுதிக்குள் மற்றும் அங்கிருந்து மேற்கொள்ளப்படும் கரைகடந்த வங்கித் தொழில் தொடர்பாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 26 ஆம் திகதிய 2394/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxi)    2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 45 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு நகரப் பொருளாதார ஆணைக்குழு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஒருமைப்பாட்டுடன் கொழும்பு துறைமுக நகரத்தின் அதிகாரப் பகுதிக்குள் மற்றும் அங்கிருந்து மேற்கொள்ளப்படும் கரைகடந்த வங்கித் தொழில் தொடர்பாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 26 ஆம் திகதிய 2394/67 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 18 ஆம் திகதிய 2393/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxiii)    2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 17 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 30 ஆம் திகதிய 2382/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxiv)    வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxv)    மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை கடுமையாக மீறல்கள் மற்றும் ஏனைய அத்தகைய குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னைய விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டறிதல்கள் மற்றும் விதப்புரைகள் தொடர்பில் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பில் நியமிக்கப்பட்ட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை (தொகுதி I)
(xxvi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    “சத்திய ஸ்ரீ கணபதி பக்தி ஜன சேவா மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    “இலங்கை வரைதல் தொழினுட்பவியலர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)  சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    “மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்விற்கான வழிவகைகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi)    தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vii)    அரசாங்க நிதி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(viii)    சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ix)    வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அநுராத ஜயரத்ன                    
(ii)    கௌரவ ஹெக்டர் அப்புஹாமி               -    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்                    
(iv)    கௌரவ ஷான் விஜயலால் த சில்வா                    
(v)    கௌரவ வீரசேன கமகே                  -    இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

நெல் விவசாயிகள், மீன்பிடித் துறையினர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    பகிரங்க சொத்துக்கள் முகாமை - நிதியதிகாரி தலைமையதிபதித் திணைக்களம் எனவழைக்கப்பட வேண்டியதும் அறியப்படவேண்டியதுமான திணைக்களமொன்றைத் தாபிப்பதற்கென ஏற்பாடு செய்வதற்கும்; பகிரங்க நிறுவனமொன்றினால் முழுமையாக சொந்தமாக வைத்திருக்கப்படும், குறித்தளிக்கப்படும், உடைமையில் வைத்திருக்கப்படும், அதற்கு உரித்தாக்கப்படும், வைத்திருக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் நிதிசாரா அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை அடையாளம் காணுவதற்கும் அவற்றிற்கான தேசிய சொத்து இடாப்பொன்றைத் தொகுப்பதற்கும்; அத்தகைய இடாப்பை காலத்துக்குக்காலம் நாளதுவரையாக்குவதற்கும் அத்தகைய சொத்துக்களின் முறையான விபரத்திரட்டுக்களை பகிரங்க நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்துவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது
(ii)    தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) - 19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கானது
(iii)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) - 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iv)    வாடகை (நீக்கல்) - 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, வாடகைச் சட்டத்தை நீக்குவதற்கானது
(v)    இருப்பாட்சியாளர்களைப் பாதுகாத்தல் - வளவொன்றில் இருப்பாட்சியிலிருந்து ஆட்களை வெளியேற்றுவதிலிருந்து நிலக்கிழார் ஒருவரைத் தடுப்பதற்கும்; மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது
(vi)    நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தம்) - (82 ஆம் அத்தியாயமான) நாணய மாற்றுண்டியல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
(i)    மகப்பேற்று நன்மைகள் (திருத்தம்)
(ii)    கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்துதல்) (திருத்தம்)

(iii) கெளரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன அவர்களுக்கு “இலங்கை விழிப்பார்வைத் தோ்வாய்வாளர்கள் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன. 3 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-
(i)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(ii)    கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


அதனையடுத்து, 1553 மணியளவில் பாராளுமன்றமானது 2024 செப்டெம்பர் 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks