பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ (திருமதி) தலதா அதுகோரள அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ கருணாரத்ன பரணவிதானகே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : கெளரவ சட்டத்தரணி (திருமதி) தலதா அதுகோரள அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது
C : “நிகழ்நிலைக் காப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
D : மத்திய வங்கியின் கடமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
A.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXVIII ஆம் பகுதியையும்; மற்றும்
• 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும் மற்றும் மூன்றாது தொகுதியின் II ஆம் பகுதி
B.
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாம் தொகுதியின் கணக்காய்வு VIII ஆம் பகுதி, நான்காம் தொகுதியின் II ஆம் பகுதி மற்றும் ஐந்தாம் தொகுதியின் II, III மற்றும் IV ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியினது ─ கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பணிப்பொறுப்பு தொடர்பான மதிப்பீடு தொடர்பான செயலாற்றுக் கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கைகள்
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2022 / 2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உண்ணாட்டு மருத்துவக் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலனோம்பல் நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2023 ஆம் ஆண்டுக்கான கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான புத்தசாசனம், கலாச்சாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(x) 2023 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi) 2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்டக் கம்பனியின் ஆண்டறிக்கை
(xii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சனாதிபதி அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அமைச்சரவை அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பகிரங்க சேவை ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில்நுட்ப அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xviii) வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வர்த்தக, பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xix) 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xx) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் செக் போட் சிடி கொழும்பு (பிறைவேட்) லிமிடெட் தொடர்பில் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2396/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi) 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 4 ஆம் பிரிவின் கீழ் சீட்டாட்டத் தொழில் உரிமமளித்தல் ஒழுங்குவிதிகள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 மே 29 ஆம் திகதிய 2386/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(xxii) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 மார்ச் 28 ஆம் திகதிய 2377/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxiii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 54 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71(2) ஆம் பிரிவின் (ட) ஆம் பந்தியின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவினதும் 1973 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கூட்டாட்சியாதன முகாமை அதிகாரசபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட கூட்டாட்சியாதன முகாமை அதிகாரசபையினதும் கலந்தாலோசனையுடனும் கொழும்புத் துறைமுக நகரின் கூட்டாட்சி முகாமை தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 26 ஆம் திகதிய 2394/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxiv) 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 7(1)(இ) மற்றும் VI உடன் வாசிக்கப்பட வேண்டிய 105 ஆம் பிரிவின் கீழ் ஏற்பாட்டு நியதிகளில் செயற்படுகின்ற இலங்கை மத்திய வங்கி ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு பெற்றுக் கொள்ளுதல் தொடர்பில் ஆளுகை சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் ஆக்கப்பட்டு, 2024 யூலை 01 ஆம் திகதிய 2391/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்
(xxv) 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரினால் ஆக்கப்பட்ட, 2024 மே 03 ஆம் திகதிய 2382/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxvi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xxvii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்ற சபைமுதல்வரின் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxviii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் கைத்தொழில் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xxx) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xxxi) 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபைச் சட்டத்தின் 36(2) ஆம் பிரிவின் (ஈ) மற்றும் (உ) ஆகிய பந்திகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 67 ஆம் பிரிவின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஏப்ரல் 11 ஆம் திகதிய 2327/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் அவ் வர்த்தமானப் பத்திரிகையின் சிங்கள மொழிபெயர்ப்பில் சட்டவரைஞரின் இலக்கம் திருத்தப்பட்டு, 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபைச் சட்டத்தின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 ஆகஸ்ட் 14 ஆம் திகதிய 2397/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxxii) 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபைச் சட்டத்தின் 36 ஆம் மற்றும் 38 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 67 ஆம் பிரிவின் கீழ் வலு நுகர்வு மட்டக்குறிகள் பற்றிய ஒழுங்குவிதிகள் தொடர்பாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 04 ஆம் திகதிய 2339/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxxiii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxxiv) வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் எட்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி உதயன கிரிந்திகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் நான்கு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சுதத் மஞ்சுல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi) சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (திருமதி) (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vii) ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு - இலங்கையில் உண்மைக்கும் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய ஆணைக்குழுவின் தத்துவங்கள் மற்றும் பணிகளை எடுத்துக்கூறுவதற்கும்; இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதப்புரைகளின் நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் நோக்கத்துக்காக ஆணைக்குழுவின் கண்காணிப்புக் குழுவைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்கானது
(ii) தேசிய காணி ஆணைக்குழு - அரசியலமைப்புக்கான ஒன்பதாவது அட்டவணையின் நிரல் I இற்கான (மாகாணசபை நிரல்) பின்னிணைப்பு II இன் விடயம் 3 இன் ஏற்பாடுகளுக்குப் பயன்கொடுப்பதற்காக தேசிய காணி ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்கானது
(iii) கம்பனிகள் (திருத்தம்) - 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தைத் திருத்துவதற்கானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.:-
(i) வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் - திருத்தங்களுடன்
(ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) - திருத்தங்களுடன்
(iii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்)
அதனையடுத்து, 1650 மணியளவில் பாராளுமன்றமானது 2024 செப்டெம்பர் 04ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks