பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற கூட்டமொன்றைக் கூட்டுவதற்கான அறிவித்தலை பாராளுமன்றச் செயலாளர் நாயகம் வாசித்தார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : "உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் வைபவம் தொடர்பான அழைப்பிதழ்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXV ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXI ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154ண (4) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவினால் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள்.
(ii) 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2013 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2024 நவம்பர் 22 ஆம் திகதிய 2411/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவ திணைக்களம் ஒன்றை நிறுவுதல் தொடர்பில் அப்போதைய கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழினுட்ப அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 நவம்பர் 29 ஆம் திகதிய 2412/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iv) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மற்றும் 1998 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 சனவரி 27 ஆம் திகதிய 2421/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(v) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை.
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) பாராளுமன்ற அலுவல்கள்
2024 டிசம்பர் 03 மற்றும் 2025 ஜனவரி 24 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளினால் தடைபெறாமல், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 ஆனது, 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுமாக.
(ii) பாராளுமன்ற அலுவல்கள்
2024 டிசம்பர் 03 மற்றும் 2025 ஜனவரி 24 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளினால் தடைபெறாமல், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 50(2) இன் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்ட “துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு” என்ற சொற்களுக்குப் பதிலாக “அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு” என்ற சொற்களை பதிலீடுசெய்வதன் மூலம் அந்த நிலையியற் கட்டளை 2025 பெப்ரவரி 28 ஆம் திகதிவரை தொழிற்படுமாக.
(iii) பாராளுமன்ற அலுவல்கள்
2024 டிசம்பர் 03 மற்றும் 2025 ஜனவரி 24 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளினால் தடைபெறாமல், அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு அரசியலமைப்பின் 152 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்ட சட்டமூலங்கள் தவிர குழுவிற்குப் பரிந்துரைக்கப்படும் ஏதேனும் சட்டமூலம், பொருத்தனை, குழுவின் விடயப்பரப்பெல்லையினுள் வரும் வருடாந்த அறிக்கை மற்றும் செயலாற்று அறிக்கை உட்பட மற்றும்/ அல்லது ஏதேனும் குழு மற்றும்/ அல்லது அமைச்சரொருவர், எவ்விடயம் அல்லது தமது நியாயாதிக்கத்திற்குள்ளான விடயங்களும் பணிகளும் தொடர்பான வேறேதேனும் கருமமொன்றை 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பரிசோதனை செய்வதற்கும் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும் தத்துவமளிக்கப்படுமாக.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 ஜனவரி 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 0955 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks