பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) வரவு செலவுத்திட்ட, பொருளாதார மற்றும் நிதி நிலை பற்றிய அறிக்கை 2025.
(ii) பிரதான பொது முதலீட்டுக் கருத்திட்டங்கள் 2025 - 2027.
(iii) குடிமக்கள் வரவு செலவுத்திட்டம் 2025.
(iv) நடுத்தர கால கடன் மேலாண்மை மூலோபாய அறிக்கை.
(v) வருடாந்த கடன் பெற்றுக்கொள்ளல் திட்டம்.
(vi) 2025 ஆம் நிதியாண்டிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு வரைபு (தொகுதி I, II, III).
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - இரண்டாம் மதிப்பீடு
கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இன்று மு.ப. 10.30 மணியளவில் (2025ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2024 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், 2025 பெப்ரவரி 20 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
இதனையடுத்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 பெப்ரவரி 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் பி.ப. 2.00 மணி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)
இரண்டாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு (ஆதரவாக 187; எதிராக 0) விடப்பட்டு, பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 158; எதிராக 0) மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பப்பட்டது.
அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றமானது 2025 பெப்ரவரி 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks